0

அல்ப விஷயம்- சரியான முறையில் கைகளை கழுவுவது எப்படி ?



அல்ப விஷயம்…என்று நீங்கள் நகைப்பது புரிகிறது.

ஆனால்…

இப்பணியில் தான் நாம் கோட்டை விட்டுக் கொண்டு இருக்கிறோம்…

உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்களினால் இறக்கிறார்கள் என்று  உலக சுகாதார நிறுவனம்.ஒன்றிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்த நோய்களினால் இறப்பவர்கள் பத்தில் ஐந்து பேர் என்கிற விகித்தில் உள்ளன.

நோய்க்கான முக்கிய காரணங்கள்

பாக்டீரியா,வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவைதான் நோய்களுக்கு முக்கிய காரணம். இவைகள் நம் கண்களில் காணமுடியாது. இவை வாய் அல்லது தோல் மூலமாக நமது உடலுக்குள் நுழைகிறது. இந்தக் கிருமிகள் பரவ மலம் முக்கிய காரணமாகிறது.

ஒரு கிராம்  மனித மலத்தில் 1 கோடி வைரஸ்களும், 10 இலட்சம் பாக்டிரியாக்களும் உள்ளன.

கைகளைக் கழுவும் பழக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?

சுத்தமாக கைகளை கழுவுவதால், நோய்க்கிருமிகள் பரவாது தடுக்கப்படுகிறது. சோப்பினால் கைகளைக் கழுவுவதால்(முக்கியமாக மலம் கழித்த பிறகும், குழந்தைகளின் மலத்தைக் கழுவிவிட்ட பிறகும் ) வயிற்றுப் போக்கு ஏற்படுவதை 42-47 சதவீதம் குறைக்கலாம் என்கிறது ஒரு சமீப ஆய்வு. தவிர இப்பழக்கத்தினால் சுவாச தொற்றுகளும்30 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.

சோப்பு எதற்காக?

தண்ணீரினால் மட்டும் கைகளைக் கழுவிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோப்பைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவுவதோடு ஒப்பிட்டால் இதனால் அடையக்கூடிய பலன்கள் குறைவுதான். சோப்பைப் பயன்படுத்தும் போது கைகளைக் கழுவும் நேரம் அதிகமாக இருக்கிறது.எண்ணெய்ப்பிசுக்கு மற்றும் தூசுக்கள் (இவற்றில் தான் பெரும்பாலான நோய்க்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன), கைகளை ஒன்றோடொன்று நன்கு அழுத்தி தேய்ப்பதால் கிருமிகள் பிலவுப்பட்டு வெளியேறுகின்றன. தவிர கைகளில் நறுமணத்தையும் சோப்பு ஏற்படுத்துகிறது.

எப்போது சோப்பு போட்டுக் கழுவவேண்டும்?

  • ·        சமைப்பதற்கு முன்பு
  • ·        உணவைப் பரிமாறுவதற்கு முன்பு
  • ·        சாப்பிட்ட பின்பு
  • ·        குழந்தையின் மலத்தைக் கழுவிவிட்ட பின்பு
  • ·        மிருகங்கள் மற்றும் சாணத்தைத் தொட்ட பின்பு
  • ·        தும்மல்,இருமல் மற்றும் மூக்கு சிந்திய பின்பு
  • ·        எப்போதெல்லாம் கைகள் அழுக்காகத் தோற்றமளிக்கிறதோ அப்போதெல்லாம்

சரியான முறையில் கைகளைக் கழுவுவது எப்படி ?

1.  உங்கள் கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பைத் தடவவும்.
2.  உள்ளங்கைகளை நன்கு தேய்த்துவிட்டுக் கொள்ளவும்.
3. விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்கவும்.
4.  வலது கை விரல் நுனிகளை இட்து கை உள்ளங்கையில் வைத்து நன்கு தேயுங்கல், இதேபோல் இட்து கை விரல் நுனிகலை வலது கை உள்ளங்கையிலும் தேயுங்கல்.
5.  உங்கள் கைகளை நீரினால் சுத்தமாக கழுவவும்.

 

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அக்டோபர் 15ஐ உலக அமைப்புகள் சேர்ந்து உலக கைகளைக் கழுவும் தினமாக அறிவித்துள்ளதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

கைகழுவும் செய்தியல்ல இது..

0

பாசத்தில் இத்தனை வகைகளா? கலைஞர் அவர்களே …..



பீகார் முதல்வர் நிதீஸ் குமார் தேர்தலில் வெற்றியை ஈட்டியுள்ளார். அவர் இருந்ததோ பாஜக கூட்டணியில்…

தேர்தலில் காங்கிரஸ் அதிக  இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

நிதிஷ் குமார் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்து  காங்கிரசை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

பீகாருக்கு சிறப்பு உரிமை அங்கிகாரம் கொடுக்க வேண்டும் என்பதே அது.

இந்தியாவிலேயே வளர்ச்சியில் பின் தங்கியுள்ள பீகாருக்கு அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கேட்கும் பிகார் முதல்வரின் கோரிக்கை நியாயம்.

இது தன் மக்களுக்கான பாசம். வரவேற்போம்.

இங்கு..

நமது கலைஞரும் வென்றார்…

சென்றார்…

கேட்டார்…

அவரின் குடும்ப உறவுகளுக்கு அமைச்சர் பதவி கேட்டார்…

கோபித்தார்…

பெற்றார்…

இது யாருடைய நலத்திற்கு…

மாநில நலத்தில் அக்கறை கொண்ட நிதீஷ் குமார் எங்கே?

நம் முதல்வர் எங்கே ?

Powered By Blogger

Enter your email address:

Delivered by FeedBurner